Monday, August 15, 2016


கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்-
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
41 வயதே உடைய கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.
திரைப்பட பாடலாசிரியராக அவர் அறியப்பட்டாலும் அவர் பல்கலைகழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வறிஞராக (ஜேஆர்எப்) தேர்ச்சி அடைந்து முனைவர் பட்டமும் பெற்று பல்கலைகழகத்தில் வகுப்பும் எடுத்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தின் மாண்புகள் சிதைந்து வரும் சூழலில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘அணிலாடு முன்றில்’ தொடர் குடும்ப உறவுகளை வலிமைப்படுத்த சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தை மறந்து விட இயலாது.
சமூக அக்கறையுடனும் சமூக நல்லிணக்கத்துடனும் அவர் திரைப்படப்பாடலாசிரியர் என்ற நிலையை தாண்டி தொடர்ந்து தமிழ் உணர்வுடன் வலிமையாக கருத்துகளை பதிவுச் செய்து வந்தார்.
இன்று காஷ்மீர் பொங்கி எழுந்து நாட்டின் விவாதப் பொருளாக மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் முத்துக்குமார் காஷ்மீர் குறித்து அல்லாஹ்வே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய 'தால்' ஏரி
என்று தொடங்கும் பாடலில்
யா அல்லாஹ்
எங்கள் காஷ்மீர்
அமைதி காணாதா..
ஓ... அந்த ஆப்பிள் தோட்டம் இங்கே
கல்லரை தோட்டம் ஆனதோ..
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதோ
வாழ்கையே இங்குதான்
வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள்
சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓ... எங்கள் காஷ்மீரி ரோஜாபூ
விதவைகள் பார்த்து அழதானா...
ஓ... எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா...
எங்களின் மண்ணில்
குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில்
கத்தி வைத்து
குத்தும் காலம்
யா அல்லாஹ்
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்..
இன்றைய காஷ்மீர் நிலையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

 http://www.youtube.com/watch?v=tMdd2CiTIhU&sns=em

இளம் இலக்கியவாதிகள் தங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென்பது கவிஞர் முத்துக்குமார் மரணம் நமக்கு கற்பிக்கும் பாடம்.
சீரிய சமூக அக்கறையுள்ள இளம் இலக்கியவாதியை தமிழகம் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(ஒப்பம்) எம்.எச்.ஜவாஹிருல்லா

Sunday, June 5, 2016

சென்னை புத்தக கண்காட்சியில் நான் எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள்



சென்னை புத்தக கண்காட்சியில் நான் எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள
1. பாலஸ்தீன வரலாறு
2. தித்திப்பான திருப்புமுனைகள்
3. 40 ஹதீஸ் குத்ஸீக்கள்

4. Wise Men on the Greatest of Men ஆகிய நூல்களை பின் வரும் அரங்குகளில் கிடைக்கும்

1.சென்னை ரஹ்மத் அறக்ககட்டளை அரங்கு எண் 136 மற்றும் 137
2. யூனிவர்சல் பப்ளிசர்ஸ் அரங்கு எண் 32 மற்றும் 33

குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி - அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்



உலகம் முழுவதும் அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்துவிட்டார். (இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன் -அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்.)


கேசியஸ் கிளே வாக ஒரு கருப்பு நிறத்தவர் குடும்பத்தில் பிறந்து தனது தனித்துவமிக்க திறமையினால் உலகை தன் பக்கம் ஈர்த்தவர் முஹம்மது அலி.

கருப்பு நிற மக்களின் உரிமைக்காக வீரமிக்க குரல் கொடுத்த மால்கம் எக்ஸின் சந்திப்பு இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முதலில் எலிஜா முஹம்மதின் நேசன் அப் இஸ்லாம் அமைப்பில் தன்னை சேர்ததுக் கொண்டார். எலிஜா முஹம்மதுின் சிந்தனை போக்கு தவறானது என்று உணர்ந்த மாலகம் எக்ஸ் அதிலிருந்து விலகிய போது முஹம்மது அலி எலிஜாவின் பக்கமே நின்றார். மால்கமை வெறுத்தார்.ஆனால் பிறகு தான் செய்தது தவறு என்று உணர்ந்து உண்மையான இஸ்லாமிய நெறியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து பின்னாட்களில் முஹம்மது அலி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: