Monday, August 15, 2016


கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்-
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
41 வயதே உடைய கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.
திரைப்பட பாடலாசிரியராக அவர் அறியப்பட்டாலும் அவர் பல்கலைகழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வறிஞராக (ஜேஆர்எப்) தேர்ச்சி அடைந்து முனைவர் பட்டமும் பெற்று பல்கலைகழகத்தில் வகுப்பும் எடுத்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தின் மாண்புகள் சிதைந்து வரும் சூழலில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘அணிலாடு முன்றில்’ தொடர் குடும்ப உறவுகளை வலிமைப்படுத்த சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தை மறந்து விட இயலாது.
சமூக அக்கறையுடனும் சமூக நல்லிணக்கத்துடனும் அவர் திரைப்படப்பாடலாசிரியர் என்ற நிலையை தாண்டி தொடர்ந்து தமிழ் உணர்வுடன் வலிமையாக கருத்துகளை பதிவுச் செய்து வந்தார்.
இன்று காஷ்மீர் பொங்கி எழுந்து நாட்டின் விவாதப் பொருளாக மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் முத்துக்குமார் காஷ்மீர் குறித்து அல்லாஹ்வே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய 'தால்' ஏரி
என்று தொடங்கும் பாடலில்
யா அல்லாஹ்
எங்கள் காஷ்மீர்
அமைதி காணாதா..
ஓ... அந்த ஆப்பிள் தோட்டம் இங்கே
கல்லரை தோட்டம் ஆனதோ..
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதோ
வாழ்கையே இங்குதான்
வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள்
சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓ... எங்கள் காஷ்மீரி ரோஜாபூ
விதவைகள் பார்த்து அழதானா...
ஓ... எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா...
எங்களின் மண்ணில்
குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில்
கத்தி வைத்து
குத்தும் காலம்
யா அல்லாஹ்
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்..
இன்றைய காஷ்மீர் நிலையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

 http://www.youtube.com/watch?v=tMdd2CiTIhU&sns=em

இளம் இலக்கியவாதிகள் தங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென்பது கவிஞர் முத்துக்குமார் மரணம் நமக்கு கற்பிக்கும் பாடம்.
சீரிய சமூக அக்கறையுள்ள இளம் இலக்கியவாதியை தமிழகம் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(ஒப்பம்) எம்.எச்.ஜவாஹிருல்லா