Saturday, November 3, 2012

அயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்!

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வேலையை முஸ்லிம் அமைப்புகள் அமைதி யாகச் செய்து வருகின்றன. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அமைப்பு இது தொடர்பான ஆலோசனைகளை லக்னோவில் கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து சென்று கலந்து கொண்டார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா.

''லக்னோ கூட்டத்தின் சாராம்சம் என்ன?''

பெரும்பாலான முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தைக்கொண்ட அமைப்புதான் 'அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்'. அயோத்தி வழக்கை முஸ்லிம்கள் சார்பில் உ.பி-யின் வஃக்பு வாரியம் நடத்தி வருகிறது. அதன் பின்புலத்தில் அதை இயங்கவைப்பது, இந்த அமைப்புதான்.

நான் கலந்துகொண்ட கூட்டத்தில் தீர்ப்பு பற்றி விரிவாக அலசப்பட்டது. நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள்பற்றி, எல்லோரும் ஒருமித்த கருத்துகளை எடுத்துவைத்தனர். 'இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட்டை நாடி தீர்ப்பைத் திருத்தி எழுத வேண்டும், அதற்கான பணிகளைத் தொடர வேண்டும்' என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சொத்து தொடர் பான வழக்குகளில், சந்தேகத்தின் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்த வரையில், மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 'அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம்' என்று சங்பரிவார் தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்குப் பிறகும்கூட 'பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்கிற கோரிக்கைகள் எழுகின்றன. முஸ்லிம் ஷரியத் சட்டம் மற்றும் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தையை நடத்த முஸ்லிம்கள் இப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்!''

Saturday, October 27, 2012

அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி 1 (புதிய தலைமுறை தொலைக்காட்சி)


புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி. ஒளிபரப்பு செய்யப்பட்ட நாள்: 27.10.2012.

Sunday, September 2, 2012

அஸ்ஸாமில் கலவரம்-பிரச்னை திசை திருப்பப்பட்டது! - பேரா ஜவாஹிருல்லாஹ்:


அஸ்ஸாமில் போடோ இன மக்கள் மற்றும் சிறுபான்மையோருக்கு இடையே நடந்த மோதலில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வட கிழக்கு பகுதி மக்கள் உயிருக்கு பயந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். இந்த நிகழ்வுகளை தங்கள் நோக்கில் அணுகி இங்கே கருத்து சொல்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.