Saturday, March 16, 2013

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முதல்வர்



தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரு மாற்று அணி அமைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அப்படி ஓர் அணி அமையும் பட்சத்தில் அதில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறலாம் என்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் மாற்று அணியின் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளோடும் நாம் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவை புதிய தரிசனத்திற்காக சந்தித்தோம்.

Friday, March 1, 2013

கமல் இஸ்லாம் அரசியல்

இஸ்லாமிய சமூகத்தினரோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்களில் தனது கருத்தை தொடர்ச்சியாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தி விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு கணிசமானது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர். தமிழகத்தில் முஸ்லிம்களின் நிலை, இடஒதுக்கீடு, விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை, அப்சல் குரு என்று தற்போது விவாதத்தில் இருக்கும் சில முக்கிய நிகழ்வுகள்மீதான தனது பார்வையை ஆழம் இதழுக்காக ஆர். முத்துக்குமாருடன் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.