Sunday, June 5, 2016

குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி - அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்



உலகம் முழுவதும் அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்துவிட்டார். (இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன் -அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்.)


கேசியஸ் கிளே வாக ஒரு கருப்பு நிறத்தவர் குடும்பத்தில் பிறந்து தனது தனித்துவமிக்க திறமையினால் உலகை தன் பக்கம் ஈர்த்தவர் முஹம்மது அலி.

கருப்பு நிற மக்களின் உரிமைக்காக வீரமிக்க குரல் கொடுத்த மால்கம் எக்ஸின் சந்திப்பு இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முதலில் எலிஜா முஹம்மதின் நேசன் அப் இஸ்லாம் அமைப்பில் தன்னை சேர்ததுக் கொண்டார். எலிஜா முஹம்மதுின் சிந்தனை போக்கு தவறானது என்று உணர்ந்த மாலகம் எக்ஸ் அதிலிருந்து விலகிய போது முஹம்மது அலி எலிஜாவின் பக்கமே நின்றார். மால்கமை வெறுத்தார்.ஆனால் பிறகு தான் செய்தது தவறு என்று உணர்ந்து உண்மையான இஸ்லாமிய நெறியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து பின்னாட்களில் முஹம்மது அலி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“I was on a tour of Egypt, Nigeria, and Ghana. I saw Malcolm in Ghana where he stopped on his way back to America. He’d just finished a holy journey to Mecca that devout Muslins are required to make once in their lives, and he was wearing the traditional Muslim white robes, further signifying his break with Elijah Muhammad. He walked with a cane that looked like a prophet’s stick and he wore a beard. I thought he’d gone too far. When he came up to greet me, I turned away, making our break public,”
“Turning my back on Malcolm was one of the mistakes that I regret most in my life. I wish I’d been able to tell Malcolm I was sorry, that he was right about so many things. But he was killed before I got the chance. He was a visionary – ahead of us all,” he writes. “Malcolm was the first to discover the truth, that color doesn’t make a man a devil. It is the heart, soul, and mind that define a person. Malcolm was a great thinker and an even greater friend. I might never have become a Muslim if it hadn’t been for Malcolm. If I could go back and do it over again, I would never have turned my back on him.”

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு அமெரிக்கா திரும்பும் வழியில் நான் கானாவில் மால்கம் எக்ஸை பார்த்தேன்.அவர் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். தாடி வைத்திருந்தார். எலிஜா முஹம்மதின் பாதையிலிருந்து முழுவதும் விலகி இருந்தார். அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்த போது நான் முகம் திருப்பி விட்டேன்.

எனது வாழ்நாள் முழுவதும் நான் செய்த தவறுகளில் இது குறித்து நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மால்கமை சந்தித்து அவர் எடுத்த பல்வேறு நிலைபாடுகள் சரியானது எனவே என்னை மன்னியுங்கள் என்று தெரிவித்திருக்க வேண்டும்.ஆனால் இவற்றை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு அவர் கொல்லப்பட்டு விட்டார்.நிறம் ஒரு மனிதனை பிசாசாக மாற்றாது என்பதை முதலில் கண்டுபிடித்தவர் மால்கம் தான். ஒரு மனிதனின் இதயமும் மனமும் எண்ணமும் தான் அவனை அடையாளப்படுத்துகின்றது.மால்கம் ஒரு மாபெரும் சிந்தனையாளர் - அதைவிட அவர் ஒரு தலைசிறந்த மனிதர். மால்கம் தொடர்பில்லாமிருந்தால் நான் ஒரு முஸ்லிமாகமல் இருந்திருப்பேன். மீண்டும் திரும்பி சென்று செயல்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் மால்கமிடம் முகத்தை திருப்பும் நிலைப்பாட்டை எடுத்திருக்க மாட்டேன்.

-முஹம்மது அலி எழுதிய சுய சரிதை The Soul of a Butterfly: Reflections on Life’s Journey. என்ற நூலிருந்து...

இணைப்பில் உள்ள காணொளி: ஒரு செய்தியாளருக்கு முஹம்மது அலியும் மால்கம் எக்ஸ் சும் அளித்த பேட்டி


No comments:

Post a Comment